ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா..!

Published : Mar 06, 2021, 08:17 PM IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா..!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, 3-1 என டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு இடத்திற்கு முன்னேறியது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-1 என தொடரை வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முன்னேறியது இந்திய அணி.

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை அடுத்து, 122 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் ஆஸி., அணி 3ம் இடத்திலும் 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4ம் இடத்திலும், 90 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5ம் இடத்திலும் உள்ளன.

ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 2ம் இடத்திலும், டி20 தரவரிசையில் 3ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!