கண் துடைப்புக்கு ஒரே ஒரு சான்ஸ்.. கழட்டிவிடப்பட்ட இளம் திறமையான வீரர்.. நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jan 13, 2020, 10:17 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இழந்த இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் படுதீவிரமாக தயாராகிவருகிறது. 

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை வரிசையாக வென்ற இந்திய அணி, அடுத்த டி20 தொடரை நியூசிலாந்தில் ஆடுகிறது. இந்திய மண்ணில் மற்ற அணிகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி, அதே ஆதிக்கத்தை நியூசிலாந்திலும் செலுத்தும் முனைப்பில் உள்ளது. 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடரில் ஆடவுள்ள நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மற்றும் ஷமி ஆகிய இருவரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். கடந்த சில தொடர்களில் தொடர்ச்சியாக அணியில் எடுக்கப்பட்டு, ஆடும் லெவனில் வாய்ப்பே கொடுக்கப்படாத சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சனுக்கு, இலங்கைக்கு எதிரான கடைசி டி20யில் கண் துடைப்புக்காக ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது. 

தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிடக்கூடாது என்ற முனைப்பில் இறங்கிய சஞ்சு சாம்சன், முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். ஆனால் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பிய நிலையில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் சஞ்சு சாம்சன் வேண்டாம் என நினைக்கிறது. அதனால்தான் அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவரை ஒரங்கட்டியுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர்.
 

click me!