ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..! கோலி, ராகுல் கம்பேக்.. பும்ரா, ஹர்ஷல் படேல் அவுட்

By karthikeyan V  |  First Published Aug 9, 2022, 7:51 AM IST

ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6வது அணியாக ஆசிய கோப்பையில் ஆடும்.

ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் பெரிய அணி என்பதை தீர்மானிக்கும் தொடர் என்பதால் முக்கியமான தொடர். இந்தியா, பாகிஸ்தான் இடையே தான் கடும் போட்டி நிலவும்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடாத இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ஓய்வில் இருந்த விராட் கோலி ஆகிய இருவரும் ஆசிய கோப்பைக்கான அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், ஃபாஸ்ட் பவுலர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக ஜடேஜா, அஷ்வின், சாஹல், பிஷ்னோய் ஆகியோரும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
 

click me!