நியூசிலாந்து பவுலர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் வெளியேறிய ரோஹித் - தவான்!! 4வது ஓவருலயே களத்துக்கு வந்த 4ம் வரிசை வீரரும் காலி

By karthikeyan VFirst Published May 25, 2019, 3:43 PM IST
Highlights

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே தலா 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் நடையை கட்டினர். 

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 4வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் விழுந்துவிட்டதால் நான்காம் வரிசை வீரர் யார் என்பது விரைவிலேயே தெரிந்துவிட்டது. 

உலக கோப்பை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முந்தைய இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்திய அணியில் இன்னும் உறுதி செய்யப்படாத நான்காம் வரிசையில் இறங்கப்போவது யார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே தலா 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் நடையை கட்டினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

இதையடுத்து தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். மூன்றாவது ஓவரை டிம் சௌதி வீச, மீண்டும் ட்ரெண்ட் போல்ட் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார். நான்காவது ஓவரிலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்ததால் 4ம் வரிசை வீரர் என்ற கேள்விக்கு சீக்கிரமே பதில் கிடைத்துவிட்டது. 

நான்காம் வரிசையில் கேஎல் ராகுல் களமிறங்கி விராட் கோலியுடன் ஆடிவருகிறார். நான்காம் வரிசையில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட விஜய் சங்கருக்கு பயிற்சியின்போது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. விஜய் சங்கர் காயத்திலிருந்து மீண்டபிறகு இருவரில் யார் இறக்கப்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

நான்காம் வரிசையில் இறங்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்த ராகுல், பெரிய இன்னிங்ஸ் ஆட  கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு 6 ரன்களில் வெளியேறினார். இவரும் ட்ரெண்ட் போல்ட்டின் பந்தில்தான் அவுட்டானார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

click me!