வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா புதிய சாதனை படைத்த இந்தியா.. கரீபியன்ஸை வைத்து தரமான சம்பவம் செய்த கோலி&கோ

By karthikeyan VFirst Published Aug 7, 2019, 10:18 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 146 ரன்கள் அடித்தது. தீபக் சாஹர் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் பொல்லார்டு பொறுப்புடன் ஆடி வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் அடிக்க, 147 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி தொடரை வென்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற மைல்கல்லை இந்திய அணி எட்டியுள்ளது. 

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-0 என வென்றது. தற்போதும் 3-0 என வென்றுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 6 டி20 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸை தொடர்ச்சியாக 5 முறை வீழ்த்திய பாகிஸ்தானின் சாதனையை முறியடித்துள்ளது இந்திய அணி. 

click me!