U19 World Cup 2024: அண்டர்19 உலகக் கோப்பை – முதல் போட்டியிலேயே இந்தியா அபார வெற்றி!

By Rsiva kumar  |  First Published Jan 20, 2024, 9:53 PM IST

19 வயதுக்கு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான தென் ஆப்பிரிக்காவில் நேற்று 19 ஆம் தேதி தொடங்கியது. இதில், அமெரிக்கா, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, நேபாள், இலங்கை, ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, நமீபியா என்று 16 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இதில், இன்று 3 போட்டிகள் நடந்தது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் ஆதர்ஷ் சிங் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 96 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 76 ரன்கள் எடுத்தார்.

Tap to resize

Latest Videos

கேப்டன் உதய் சஹாரன் 94 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீர்ரகள் ஓரளவு கை கொடுக்க இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சைப் பொறுத்த வரையில் வங்கதேச வீரர் மரூஃப் மிருதா 8 ஓவர்கள் வீசி 1 மெய்டன் உள்பட 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் வந்த வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முகமது ஷிஹாப் ஜேம்ஸ் மற்றும் அரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதில் இஸ்லாம் 41 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற வங்கதேச அணியானது 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுதது 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் சௌமி பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முஷீர் கான் 2 விக்கெட்டும், ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி மற்றும் பிரியன்ஷூ மோலியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இந்திய அணி விளையாடிய முதல் போட்டி. தனது முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்காக உலகக் கோப்பை பிரிவுகள்:

குழு ஏ: வங்கதேசம், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா

குழு பி: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

குழு சி: ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே

குழு டி: ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்

இந்திய அணியில் உள்ள வீரர்கள்:

அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா, முஷீர் கான்,உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவ்னீஷ். ராவ், சௌம்யா குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இனேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி.

click me!