குஜராத்துக்கு ஹாட்ரிக் வெற்றி, மும்பைக்கு ஹாட்ரிக் தோல்வி – ஹர்திக் பாண்டியா ஓர வஞ்சகமா?

By Rsiva kumar  |  First Published Apr 2, 2024, 9:38 AM IST

கடந்த 2022 ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அவரது தலைமையிலான மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றி பெற்றது. இதுவரையில் நடந்த 14 லீக் போட்டிகளில் ஹோம் அணியே 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றிருக்கிறது.

சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுள்ளன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் முறையே 6 ரன்கள், 31 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் மாற்றப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடும் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி தற்போது கேப்டன்ஸி மீதே விமர்சனம் எழும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.

மேலும், புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. அதோடு, பவுலிங்கில் அதிக ரன்கள் கொடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறது. தற்போது ஹாட்ரிக் தோல்வி அடைந்த அணி என்ற சாதனையையும் மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

ஆனால், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் வெற்றி தேடிக் கொடுத்தார். ஆனால், இப்போது மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று ஹாட்ரிக் தோல்வியை பெற்றுக் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த தோல்வியைத் தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டன்ஸி மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

click me!