இம்ரான் தாஹிர் இவ்ளோ சூப்பரா பேட்டிங் ஆடுவாரா?19பந்தில் 52 ரன்கள்;ஐந்தே பந்தில் ஆட்டத்தை மாற்றிய தாஹிர் வீடியோ

Published : Jan 23, 2022, 03:52 PM IST
இம்ரான் தாஹிர் இவ்ளோ சூப்பரா பேட்டிங் ஆடுவாரா?19பந்தில் 52 ரன்கள்;ஐந்தே பந்தில் ஆட்டத்தை மாற்றிய தாஹிர் வீடியோ

சுருக்கம்

லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இம்ரான் தாஹிரின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா மஹாராஜாஸ் அணியை வீழ்த்தி வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.  

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மஹாராஜாஸ் மற்றும் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா மஹாராஜாஸ் அணியின் தொடக்க வீரர் நமன் ஓஜா அதிரடியாக ஆடி 69 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 140 ரன்களை குவித்தார். நமன் ஓஜாவின் அதிரடி சதம் மற்றும் முகமது கைஃபின் அரைசதத்தால் (53) 20 ஓவரில் 209 ரன்களை குவித்தது.

210 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கெவின் பீட்டர்சன் அரைசதம் அடித்தார். பீட்டர்சன் 53 ரன்னில் ஆட்டமிழக்க, பின்வரிசையில் பிராட் ஹாடின் (21), டேரன் சமி (28) மற்றும் மோர்னே மோர்கல் (21) ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்ய, 9ம் வரிசையில் இறங்கிய ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் ஐந்தே பந்தில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார்.

கோனி வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசிய இம்ரான் தாஹிர், வேணுகோபால் ராவ் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி 19 பந்தில் அரைசதம் அடித்து, ஆட்டத்தை முடித்துவைத்தார். இம்ரான் தாஹிரின் அதிரடியான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

ரிஸ்ட் ஸ்பின்னரான இம்ரான் தாஹிர் இந்தளவிற்கு பேட்டிங் ஆடுவாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் இந்த இன்னிங்ஸை பார்த்தனர். டக் அவுட்டில் இருந்த ஜாண்டி ரோட்ஸ் மற்றும் டேரன் சமி ஆகியோர் தாஹிரின் பேட்டிங்கை என்ஜாய் செய்து பார்த்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!