SA vs BAN டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!ஆதிக்கம்செலுத்தும் தென்னாப்பிரிக்கா

Published : Apr 11, 2022, 04:14 PM IST
SA vs BAN டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!ஆதிக்கம்செலுத்தும் தென்னாப்பிரிக்கா

சுருக்கம்

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 2வது டெஸ்ட்டில் 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

இந்த தொடருக்கு முன்பாகவும் தென்னாப்பிரிக்க அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் தான் இருந்தது. இப்போதும் 2ம் இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 60 சதவிகிதத்திலிருந்து 71.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 75 சதவிகித வெற்றி விகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட வெறும் மூன்றரை சதவிகிதம் மட்டுமே தென்னாப்பிரிக்கா பின் தங்கியுள்ளது. 

இந்திய அணி 58.33 சதவிதத்துடன் 3ம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 52.38 சதவிகிதத்துடன் 4ம் இடத்திலும் உள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி