டி20 உலக கோப்பை ஓராண்டு ஒத்திவைப்பு..! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஐபிஎல் ரூட் கிளியர்

By karthikeyan VFirst Published Jul 20, 2020, 8:38 PM IST
Highlights

வரும் அக்டோபர் மாதம் தொடங்குவதாக இருந்த டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைத்துள்ளது ஐசிசி. 
 

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து  எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்கி நடந்துவருகிறது.

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கியிருப்பது நல்ல சமிக்ஞை. எனவே அடுத்தடுத்து தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இரண்டும் தான். மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்ட ஐபிஎல், கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என்ற பேச்சும் இருந்தது. டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் பட்சத்தில், அக்டோபர்  - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் செப்டம்பர் 26ம் தேதி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலக கோப்பை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகத்தான் பிசிசிஐ காத்திருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக இருந்த டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் நடத்தப்படும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனவே ஐபிஎல் நடப்பது உறுதியாகியுள்ளது.
 

click me!