டி20 உலக கோப்பை போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி..! முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா

By karthikeyan VFirst Published Aug 17, 2021, 2:10 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியாவில் நடப்பதாக இருந்த இந்த டி20 உலக கோப்பை தொடரை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. ஆனால் இதை நடத்தும் உரிமை பிசிசிஐ உடையதுதான்.

டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், போட்டி அட்டவணனையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

சூப்பர் 12 சுற்றில் எந்தெந்த அணிகள் எந்த க்ரூப்பில் இடம்பெறுகின்றன என்பதை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், இப்போது போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

க்ரூப் 1 - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஏ பிரிவின் வின்னர், பி பிரிவின் ரன்னர்.

க்ரூப் 2 - இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தா, பி பிரிவின் வின்னர், ஏ பிரிவின் ரன்னர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே க்ரூப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், க்ரூப் 2ல் முதல் போட்டியிலேயே இந்தியாவும் பாகிஸ்தானும் தான் மோதுகின்றன. அக்டோபர் 24ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. 

அதன்பின்னர் அக்டோபர் 31ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி, நவம்பர் 2ம் தேதி ஆஃப்கானிஸ்தானையும், நவம்பர் 5ம் தேதி பி பிரிவில் வெற்றி பெற்று தகுதிபெறும் அணியையும் எதிர்கொண்டு ஆடுகிறது. நவம்பர் 8ம் தேதி, ஏ பிரிவின் ரன்னரை எதிர்கொள்கிறது. 

நவம்பர் 10ம் தேதி முதல் அரையிறுதி போட்டியும், 11ம் தேதி 2வது அரையிறுதி போட்டியும், நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டியும் நடக்கின்றன.
 

click me!