2021ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் லெவன்..! ஐசிசி தேர்வு செய்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்ல

By karthikeyan VFirst Published Jan 20, 2022, 10:01 PM IST
Highlights

2021ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளது ஐசிசி.
 

ஐசிசி 2021ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டின் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

அந்தவகையில், 2021ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் லெவனை ஐசிசி அறிவித்துள்ளது.  அயர்லாந்தின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பால் ஸ்டர்லிங் மற்றும் தென்ன்னாப்பிரிக்காவின் ஜே மலான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்த ஐசிசி, பாபர் அசாமை 3ம் வரிசை வீரராக தேர்வு செய்து, அவரையே கேப்டனாகவும் அறிவித்துள்ளது.

4ம் வரிசை வீரராக பாகிஸ்தானின் ஃபகர் ஜமானையும், 5ம் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் ராசி வாண்டர் டசனையும் தேர்வு செய்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் வாண்டர் டசன் மிகச்சிறப்பாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக உருவெடுத்துவருகிறார். இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட சதமடித்த அவர், 129 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஸ்பின் ஆல்ரவுண்டராக வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனையும், விக்கெட் கீப்பராக வங்கதேச சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீமையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, ஸ்பின்னராக இலங்கையின் நட்சத்திர ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவையும், ஃபாஸ்ட் பவுலர்களாக வங்கதேசத்தின் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் இலங்கையின் துஷ்மந்தா சமீரா ஆகியோருடன் சிமி சிங்கையும் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி தேர்வு செய்த 2021ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் லெவனில் 3 வங்கதேச வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு இந்திய வீரர் கூட இல்லை.

ஐசிசி தேர்வு செய்த 2021ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் லெவன்:

பால் ஸ்டர்லிங், ஜே மலான், பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், ராசி வாண்டர் டசன், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சிமி சிங், துஷ்மந்தா சமீரா.
 

click me!