கேப்டன்களிடமிருந்து அந்த உரிமையை புடுங்கணும்.. டிஆர்எஸ் விதியை மாத்தணும்.. தெறிக்கவிடும் முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Jul 22, 2019, 4:00 PM IST
Highlights

டி.ஆர்.எஸ் விதிமுறை மாற்றுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை முழுவதுமே அம்பயர்களின் தவறான சில முடிவுகளால் போட்டியின் முடிவே மாறிவிட்டது. அரையிறுதி போட்டி, இறுதி போட்டி என நாக் அவுட் சுற்று போட்டிகளிலும் அம்பயர்களின் மோசமான செயல்பாடுகளால் போட்டியின் முடிவு மாறியுள்ளது. களநடுவர்கள் சில நேரங்களில் தவறான தீர்ப்புகளை வழங்கக்கூடும் என்பதால் தான் அவர்களின் தீர்ப்புகளை ரிவியூ செய்யும் டி.ஆர்.எஸ் முறை கொண்டுவரப்பட்டது. 

ஆனால் டி.ஆர்.எஸ் முறையின் விதிகள் அம்பயர்களின் தீர்ப்புகளை விட படுமோசமாக உள்ளது. எல்பிடபிள்யூ விவகாரங்களில் பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று கொடுக்க வேண்டும். பவுலர் ஸ்டம்புக்கு நேராக வீசிய பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டாலே அவுட் கொடுத்துவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். 

எல்பிடபிள்யூ-வை பொறுத்தமட்டில் கள நடுவர்கள் எப்போதுமே 100% துல்லியமாக செயல்பட முடியாது என்பதால் தான் ரிவியூவே. ஆனால் ரிவியூவில் பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டால், அம்பயர் கால் என்ற வகையில் கள நடுவரின் முடிவுக்கே விடப்படுகிறது. அப்படி செய்வதால், களநடுவர்களின் தனிப்பட்ட திறன் மற்றும் செயல்பாடுகளை பொறுத்து வீரர்கள் வெளியேற வேண்டியோ அல்லது பவுலர்கள் வருத்தப்பட வேண்டியோ உள்ளது. 

டி.ஆர்.எஸ் விதிமுறையை மாற்றியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், டி.ஆர்.எஸ் முறை குறித்து பேசிய இயன் சேப்பல், டி.ஆர்.எஸ் முறை உலக கோப்பையில் கடும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியது. ரிவியூ எடுக்கும் உரிமையை முதலில் கேப்டன்கள் மற்றும் வீரர்களிடமிருந்து பறிப்பது நல்லது. அது அம்பயர்களின் வசம் இருப்பதுதான் சிறந்தது என்று இயன் சேப்பல் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

click me!