என் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே அவருதான் தலைசிறந்த பேட்ஸ்மேன்..! வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 6, 2020, 5:34 PM IST
Highlights

தான் பந்துவீசியதிலேயே எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசியது கடினமாக இருந்தது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். 
 

தான் பந்துவீசியதிலேயே எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசியது கடினமாக இருந்தது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை கொண்ட அணிகளில் வெஸ்ட் இண்டீஸும் ஒன்று. ஆம்ப்ரூஸ், வால்ஷ் என மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் இயன் பிஷப்பும் ஒருவர். 1990களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய இயன் பிஷப், 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 161 விக்கெட்டுகளையும் 84 ஒருநாள் போட்டிகளில் ஆடி 113 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், வர்ணனையாளராக அசத்திவருகிறார் இயன் பிஷப். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசிய இயன் பிஷப், என் கெரியரில் நான் பந்துவீசியதில், மிகக்கடினமான பேட்ஸ்மேன்களில் சச்சினும் ஒருவர். அவர் ஸ்டிரைட் திசையில் நிறைய ஷாட்டுகளை அருமையாக ஆடுவார் என்று இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இயன் பிஷப் ஆடியுள்ள நிலையில், 3 முறை சச்சினை அவுட்டாக்கியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் அதிசயம். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஒரே வீரர். இனிமேல் ஒரு வீரர் 24 ஆண்டுகளுக்கு வெற்றிகரமான வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்ச முடியாது. அதிகமான சதங்கள்(100 சர்வதேச சதங்கள்), அதிகமான ரன்கள் ஆகிய சச்சினின் சாதனைகளை தகர்க்கப்படுவது சந்தேகம் தான். ஒருநாள் கிரிக்கெட்டில் 18426 ரன்களையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15921 ரன்களையும் குவித்து ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் சச்சின் டெண்டுல்கர், தனது கெரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்ராத், சமிந்தா வாஸ், ஷோயப் அக்தர், வால்ஷ், ஆம்ப்ரூஸ் என பல தலைசிறந்த பவுலர்களையே தெறிக்கவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!