அஃப்ரிடிக்கு யார்கிட்டயாவது மூக்கு உடைபடலனா தூக்கமே வராது.! இந்திய அணியை மட்டம்தட்டிய அஃப்ரிடிக்கு தக்க பதிலடி

By karthikeyan VFirst Published Jul 6, 2020, 3:53 PM IST
Highlights

இந்திய அணியை பற்றி அஃப்ரிடி பேசிய பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
 

கங்குலி கேப்டன் ஆனதற்கு பிறகு 2000ம் ஆண்டுக்கு பின்னர், பாகிஸ்தானை அதிகமான போட்டிகளில் வீழ்த்தி இந்திய அணி நிறைய வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதேயில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமான வெற்றிகளை கங்குலி தலைமையிலான அணி தான் குவிக்க தொடங்கியது. அதன்பின்னர் தோனி, கோலி ஆகிய கேப்டன்கள் கங்குலியின் அடிச்சுவட்டை பின்பற்றி, பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி கோலோச்சும் அணியாக மென்மேலும் மேம்படுத்தியுள்ளனர். இந்திய அணி வளர்ச்சியடைந்து பூதாகர சக்தியாக வளர்ந்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி வீழ்ச்சியடைந்திருக்கிறது. 

கடந்த 20-25 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமான வெற்றிகளை குவித்துள்ளது. ஆனால் அதற்கு முன் பாகிஸ்தான் அணி தான் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தி அதிகமான வெற்றிகளை பெற்றிருந்தது.

இந்நிலையில், வழக்கமாக இந்திய அணி குறித்தும் இந்தியா குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறி அதற்கு தகுந்த பதிலடியை வாங்கிக்கொண்டு மூக்குடைந்து செல்வதே அஃப்ரிடியின் வழக்கம். அந்தவகையில், இப்போதும் அப்படியான ஒரு கருத்தை தெரிவித்து மூக்குடைபட்டுள்ளார். 

கிரிக்கெட் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஃப்ரிடி, இந்தியாவுக்கு எதிராக ஆடத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திய அணியை பலமுறை அடித்து துவம்சம் செய்து கதறவிட்டிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக ரசித்து மகிழ்ந்து உற்சாகமாக ஆடுவேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும்போதும் அதிக அழுத்தம் இருக்கும். அதுவும் எனக்கு பிடிக்கும். இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சிறந்த மற்றும் பெரிய அணிகள். எனவே அவற்றிற்கு எதிராக ஆடத்தான் பிடிக்கும் என்றார். 

பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளை பெற்றது உண்மைதான். ஆனால், அஃப்ரிடி கிரிக்கெட் ஆட வந்ததற்கு பிறகு இந்திய அணி தான் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தியதே தவிர, பாகிஸ்தான் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் அவர் என்னவோ, அவரது காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கை ஓங்கியிருந்தது போல பேசியுள்ளார். அதை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் சிறந்து விளங்கியது உண்மைதான். இப்போதும் சிறந்த அணியாக இல்லையென்றாலும், ஓரளவிற்கு நல்ல அணியாகத்தான் உள்ளது. பாகிஸ்தான் அணியின் கை சற்று ஓங்கியிருந்தது உண்மைதான். ஆனால் அது அஃப்ரிடி ஆடிய காலத்தில் அல்ல. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டினர். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் இந்திய அணியை அதிகமாக வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் அஃப்ரிடி ஆட வந்த காலத்தில் எல்லம இந்தியாவின் கை ஓங்கிவிட்டது. அஃப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக ஆட ஆரம்பித்ததில் இருந்து, அவர் ஓய்வு பெறும் வரை இந்திய அணி தான் பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்தது.

அஃப்ரிடி வேறு எதையோ பேச நினைத்து, தவறாக வேறு எதையோ பேசிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். தவறான புரிதல்களுக்கு தீர்வு இல்லை என்று அஃப்ரிடியை விளாசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

click me!