ஐபிஎல்: ஆல்டைம் பெஸ்ட் டெல்லி கேபிடள்ஸ் லெவன்..! கேப்டன் சேவாக்.. முன்னாள் வீரரின் தரமான தேர்வு

By karthikeyan VFirst Published Jul 5, 2020, 10:21 PM IST
Highlights

ஆகாஷ் சோப்ரா தனது ஆல்டைம் பெஸ்ட் டெல்லி கேபிடள்ஸ் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

ஆகாஷ் சோப்ரா தனது ஆல்டைம் பெஸ்ட் டெல்லி கேபிடள்ஸ் லெவனை தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட டைட்டிலை வெல்லாத 3 அணிகளில் டெல்லி கேபிடள்ஸும் ஒன்று. கோப்பையை வெல்லமுடியாதது மட்டுமல்லாது, இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி கேபிடள்ஸ் தான். 

டெல்லி அணியில் சேவாக், கம்பீர், டிவில்லியர்ஸ் ஆகிய பல சிறந்த வீரர்கள் ஆடியிருந்தாலும், அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேபிடள்ஸ் அணி, ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியால் கடந்த சீசனில் சிறப்பாக ஆடியது.

முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸ் அணி உள்ளது. இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆல்டைம் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் டெல்லி கேபிடள்ஸ் லெவனின் தொடக்க வீரர்களாக அதிரடி வீரர்களான சேவாக் மற்றும் கம்பீர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். சேவாக்கை கேப்டனாகவும் நியமித்துள்ளார். சேவாக் தனது சொந்த ஊரான டெல்லி அணியின் கேப்டனாகவும் அந்த அணிக்காக அதிகமான சீசன்களிலும் ஆடியுள்ளார்.

மூன்றாம் வரிசை வீரராக மிஸ்டர் 360 டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார். டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் இணைவதற்கு முன்பாக, 2008-2010 ஐபிஎல் சீசன்களில் டெல்லி அணியில் தான் ஆடினார். நான்காம் வரிசை வீரராக தற்போதைய டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரையும் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, ஜேபி டுமினி, கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். டுமினி, மோரிஸ் ஆகிய இருவருமே ஆல்ரவுண்டர்கள்.

ஸ்பின்னர்களாக அமித் மிஷ்ரா மற்றும் ஷபாஸ் நதீமையும், ஃபாஸ்ட் பவுலர்களாக இந்தியாவின் ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் ஆஸ்திரேலியாவின் டிர்க் நான்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 
 
ஆகாஷ் சோப்ராவின் ஆல்டைம் டெல்லி கேபிடள்ஸ் லெவன்:

வீரேந்திர சேவாக்(கேப்டன்), கவுதம் கம்பீர், டிவில்லியர்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜேபி டுமினி, கிறிஸ் மோரிஸ், அமித் மிஷ்ரா, ஷபாஸ் நதீம், ஆஷிஸ் நெஹ்ரா, டிர்க் நான்ஸ்.
 

click me!