உலக கோப்பை 2019: பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற என்ன செய்யணும்..? இதெல்லாம் நடக்குற காரியமா..?

By karthikeyan VFirst Published Jul 5, 2019, 9:59 AM IST
Highlights

புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் +0.175. நியூசிலாந்து அணிக்கு லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன. ஐந்தாமிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஒரேயொரு போட்டி எஞ்சியுள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 
 
உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் முடிவடைய உள்ளது. நாக் அவுட் சுற்று போட்டிகள் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. எஞ்சிய ஒரு இடத்தை நியூசிலாந்து பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் +0.175. நியூசிலாந்து அணிக்கு லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன. ஐந்தாமிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஒரேயொரு போட்டி எஞ்சியுள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 

இதுவரை 8 போட்டிகளில் ஆடி 9 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் -0.792 ஆகும். பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 11 புள்ளிகளை பெறும். ஆனால் அதே புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்தை அணியை பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் நெட் ரன்ரேட்டில் நியூசிலாந்தை அடிக்க வேண்டும். 

நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட்டை முந்த வேண்டுமென்றால், பாகிஸ்தான் அணி பெரிய வெற்றியை பெற வேண்டும். பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய 2 கண்டிஷன்களை பார்ப்போம்.

1. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடினால், 300 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். 

2. பாகிஸ்தான் அணி இரண்டாவதாக பேட்டிங் ஆடினால், ஒரு பந்துகூட வீசப்படாமல் வென்றாக வேண்டும். 

இது இரண்டுமே நடப்பதற்கு சாத்தியமில்லாத விஷயங்கள். எனவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பே இல்லை. 
 
click me!