டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்..?

Published : Aug 01, 2021, 10:31 PM IST
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்..?

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த இந்திய அணியை பார்ப்போம்.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர்  17 தொடங்கி நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி உட்பட அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன.

இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லவில்லை என்ற தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. இந்திய அணி வெல்வதற்கு அணி தேர்வு மிக முக்கியம்.

அந்தவகையில், முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவரிசையில், கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவும் இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய நால்வரும் ஆடுவது உறுதி. மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவர் என்று ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஸ்பின்னர்களாக தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும், சாஹலையும் தேர்வு செய்துள்ள போக்ளே, இவர்களுடன் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவையும் தேர்வு செய்துள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா,புவனேஷ்வர் குமார் ஆகிய இருவருடன் நடராஜன் அல்லது ஷமி ஆகிய இருவரில் ஒருவர் என்று ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். 

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகிய 3  தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்/இஷான் கிஷன், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி/நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்