
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார். இந்த தொடரில் சில மைல்கற்களை எட்ட பாண்ட்யா இலக்கு வைத்துள்ளார். 31 வயதான பாண்ட்யா இதுவரை 114 டி20 போட்டிகளில் விளையாடி 141.67 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் 1,812 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து அரைசதங்களும் அடங்கும்.
சாதனை படைக்கப் போகும் ஹர்திக் பாண்ட்யா
டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 188 ரன்கள் மட்டுமே தேவை. ஆசியக் கோப்பை தொடர் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு சரியான தளமாக அமையலாம். பந்துவீச்சிலும் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 100 விக்கெட்டுகளை எட்ட இன்னும் ஆறு விக்கெட்டுகள் மட்டுமே தேவை. டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/16.
ஆசியக் கோப்பை அட்டவணை
செப்டம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியுடன் இந்திய அணியின் ஆசியக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் விளையாடும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும்.
இறுதிப் போட்டி எப்போது?
குரூப் சுற்றுக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்தியா குரூப் A இல் முதலிடத்தைப் பிடித்தால், அதன் அனைத்து சூப்பர் 4 போட்டிகளும் துபாயில் நடைபெறும். இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால், அதன் சூப்பர் 4 போட்டிகளில் ஒன்று அபுதாபியிலும், மீதமுள்ள இரண்டு போட்டிகளும் துபாயிலும் நடைபெறும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 28 ஆம் தேதி துபாயில் நடைபெறும்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங். மாற்று வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்