ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கிட்டத்தட்ட 14 மாதங்களாக டி20 கிரிக்கெட்டில் விளையாடாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் இடம் பெறவில்லை.
உலகக் கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து வரும் நிலையில், இந்த தொடரில் இடம் பெறவில்லை. இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா தொடரில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் டி20 தொடருக்கு முன்னதாக பயிற்சியின் போது விரலில் காயமடைந்த நிலையில், அந்த தொடரிலிருந்து வெளியேறினார்.
புரோ கபடி லீக் ஏலத்தில் கிடைத்த ரூ.31.6 லட்சத்தையும் நன்கொடையாக வழங்க இருக்கிறேன் – மாசான முத்து!
இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியின் போது கணுக்கால் பகுதியில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக போட்டியிலிருந்து வெளியேறினார். ஆனால், ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற உள்ள நிலையில், இந்த தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கேஎல் ராகுலுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகவும், ரவி பிஷ்னோய், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டி20 தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.
PKL10: 8ஆவது தோல்வி – கடைசி வரை போராடி 3 புள்ளிகளில் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்!
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது போட்டி 14ஆம் தேதியும், 3ஆவது டி20 போட்டி 17ஆம் தேதியும் நடக்கிறது. இதுவரையில் 148 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, 3853 ரன்களும், 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 118 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.