இது என்ன டீம் செலக்‌ஷன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.. இந்திய அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Feb 8, 2020, 2:36 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி தேர்வை ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள்  அடித்தும் கூட, அந்த இலக்கை அடிக்கவிடாமல் நியூசிலாந்தை இந்திய அணியால் தடுக்க முடியவில்லை. 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

அந்த போட்டியில் குல்தீப் யாதவ் 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் 9 ஓவர்கள் மட்டுமே வீசி 80 ரன்களையும் வாரி வழங்கினர். எனவே இரண்டாவது போட்டியில் இவர்கள் இருவரும் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குல்தீப்புக்கு பதிலாக சாஹலும் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனியும் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

குல்தீப்பிற்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். அதேபோல எதிர்பார்க்கப்பட்டதை போலவே நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அல்ல; ஷமிக்கு பதிலாக சைனி எடுக்கப்பட்டார். இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய இன்றைய போட்டியில், ஷர்துல் தாகூரை நீக்காமல் ஷமியை நீக்கியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 

நல்ல ஃபார்மில் அருமையாக வீசிக்கொண்டிருக்கும் அனுபவ பவுலர் ஷமியை நீக்கிவிட்டு, முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாகூரை ஆடவைத்தது தவறான முடிவு என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய சூழலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடும் இந்திய அணி, ஷமியை நீக்கியது எந்த மாதிரியான முடிவு என்றே எனக்கு தெரியவில்லை. சைனியை சேர்த்தது சரியான முடிவுதான். ஆனால் ஷமியை நீக்கிவிட்டு சைனியை சேர்த்திருக்கக்கூடாது. ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு சைனியை சேர்த்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார். 
 

click me!