T20 World Cup தொடரின் சிறந்த லெவன்..! ஹர்பஜன் சிங்கின் அணியில் 2 இந்தியர்கள், 3 பாகிஸ்தானியர்கள்

Published : Nov 16, 2021, 10:09 PM IST
T20 World Cup தொடரின் சிறந்த லெவன்..! ஹர்பஜன் சிங்கின் அணியில் 2 இந்தியர்கள், 3 பாகிஸ்தானியர்கள்

சுருக்கம்

டி20 உலக கோப்பையின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.  

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய எந்த அணியும் கோப்பையை வெல்லவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளாவது அரையிறுதிக்கு சென்றன. ஆனால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றமளித்தன.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் அடைந்த படுதோல்விகளின் காரணமாக, அடுத்த 3 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

டி20 உலக கோப்பையின் சிறந்த தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்த உலக கோப்பையில் 289 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார் டேவிட் வார்னர். மற்றொரு தொடக்க வீரராக, ஐசியூவில் இருந்து வந்து உயிரை பணயம் வைத்து பாகிஸ்தானுக்காக அரையிறுதியில் ஆடிய முகமது ரிஸ்வானை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

3ம் வரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனையும், 4ம் வரிசையில் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளார். டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரராக ஆடிய ஜோஸ் பட்லரை 4ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

5ம் வரிசையில்  தென்னாப்பிரிக்காவின் மிடில் ஆர்டருக்கு வலுசேர்த்த மார்க்ரமையும், ஃபினிஷராக பாகிஸ்தானின் ஆசிஃப் அலியையும் தேர்வு செய்த ஹர்பஜன் சிங், ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக வனிந்து ஹசரங்கா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஹர்பஜன் சிங், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷாஹீன் அஃப்ரிடி, டிரெண்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

டி20 உலக கோப்பை 2021 தொடரின் சிறந்த லெவனை தேர்வு செய்த எந்த முன்னாள் வீரரும் தங்களது லெவனில் ஒரு இந்திய வீரரை கூட எடுக்கவில்லை. ஆனால் ஹர்பஜன் சிங், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 2 இந்திய வீரர்களை எடுத்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் அணியில் ரிஸ்வான், ஆசிஃப் அலி, ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய 3 பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த லெவன்:

டேவிட் வார்னர், முகமது ரிஸ்வான், கேன் வில்லியம்சன், ஜோஸ் பட்லர், மார்க்ரம், வனிந்து ஹசரங்கா, ஆசிஃப் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷாஹீன் அஃப்ரிடி, டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

12வது வீரர் ரஷீத் கான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: அபிஷேக் - இஷான் ஜோடியா? தோனி ஸ்டைலில் ஒரு அதிரடி முடிவு! விண்டீஸ் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11 இதுதான்!
தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!