புது பந்தை கொடுத்தால் போதும்.. சின்ராச கைலயே புடிக்கமுடியாது.. இந்திய வீரரை சூர்யவம்சம் பாணியில் புகழ்ந்த ஹர்பஜன் சிங்

By karthikeyan VFirst Published Aug 7, 2019, 4:04 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய தீபக் சாஹர், 3 ஓவர்கள் வீசி, வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்திய அணியின் பேட்டிங் வலுவடைவது போல் தெரியவில்லை. ஆனால் அதற்கு மாறாக, ஏற்கனவே வலுவாக இருக்கும் பவுலிங் மேலும் வலுவடைந்து கொண்டிருக்கிறது. 

பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணி பவுலிங்கில் மிரட்டுகிறது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என இந்திய அணி பவுலிங்கில் மிரட்டி கொண்டிருக்கும் நிலையில், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரின் வருகையால் இந்திய அணி பவுலிங்கில் மேலும் வலுவடைந்திருக்கிறது. 

சைனி 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். நல்ல வேகத்துடன் அவர் வீசிவருகிறார். அதேநேரத்தில் தீபக் சாஹர் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்கிறார். புவனேஷ்வர் குமார் என்ற நல்ல ஸ்விங் பவுலரை இந்திய அணி பெற்றிருக்கும் நிலையில், தற்போது தீபக் சாஹரும் கிடைத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய தீபக் சாஹர், 3 ஓவர்கள் வீசி, வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தீபக் சாஹர் புதிய பந்தில் அபாரமாக வீசினார். அவரது பந்தை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளவே முடியாமல் திணறினர்.

அந்த போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, தீபக் சாஹரை வெகுவாக பாராட்டினார். புவனேஷ்வர் குமாரை போலவே புதிய பந்தில் தீபக் சாஹரும் அபாரமாக வீசுவதாக பாராட்டியிருந்தார். 

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் ஆடும் தீபக் சாஹரின் சகவீரரான ஹர்பஜன் சிங், தன் பங்கிற்கு வழக்கம்போல தமிழில் டூவிட்டி தீபக் சாஹரை பாராட்டியுள்ளார். புதிய பந்தை கொடுத்தால் போதும்; சின்ராச கையிலயே பிடிக்க முடியாது என சூர்யவம்சம் பட டயலாக்குடன் தீபக் சாஹரை பாராட்டியுள்ளார். 

நம்ம பய இருக்கானே செம திறமைசாலி புது பால் கையில கொடுத்துட்டா போதும் சின்ராச கைலயே பிடிக்க முடியாது. ஸ்டிக் தெறிக்கும் பந்து சும்மா ஸ்விங் ஆகுற அழகே தனி 3-1-4-3 பட்டாசு Spell. சொத்து இப்போ ஓட பெருமை புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்

— Harbhajan Turbanator (@harbhajan_singh)
click me!