IPL 2022: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு..! எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்லுங்க

Published : Mar 13, 2022, 09:31 PM IST
IPL 2022: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு..! எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்லுங்க

சுருக்கம்

குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 15வது சீசனுக்கான ஜெர்சியை வெளியிட்டுள்ளது.  

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்கி, பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் ஆடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி கட்டமைப்பு:

இந்த அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் உள்ளனர். ஏலத்தில் ஜேசன் ராய், மேத்யூ வேட், டேவிட் மில்லர், லாக்கி ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களையும், விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ஜெயந்த் யாதவ், ஆகிய இந்திய ஆல்ரவுண்டர்கள் மற்றும் வருண் ஆரோன், முகமது ஷமி, ரிதிமான் சஹா ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இடம்பெற்றிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஐபிஎல்லில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஜெர்சி வெளியீடு:

ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆஷிஷ் நெஹ்ராவின் பயிற்சியில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அந்த அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: அபிஷேக் - இஷான் ஜோடியா? தோனி ஸ்டைலில் ஒரு அதிரடி முடிவு! விண்டீஸ் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11 இதுதான்!
தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!