ஜோ ரூட் எங்களை அசிங்கப்படுத்திட்டாரு.. இதே இந்தியா, ஆஸ்திரேலியாவா இருந்தா இப்படி பண்ணுவாரா.? WI வீரர் ஆதங்கம்

Published : Mar 13, 2022, 08:37 PM IST
ஜோ ரூட் எங்களை அசிங்கப்படுத்திட்டாரு.. இதே இந்தியா, ஆஸ்திரேலியாவா இருந்தா இப்படி பண்ணுவாரா.? WI வீரர் ஆதங்கம்

சுருக்கம்

இங்கிலாந்து அணியும் கேப்டன் ஜோ ரூட்டும் வெஸ்ட் இண்டீஸை அசிங்கப்படுத்திவிட்டதாக அந்த அணியின் கேப்டன் கார்லாஸ் பிராத்வெயிட் குற்றம்சாட்டியுள்ளார்.  

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் அடித்தது. பேர்ஸ்டோ அதிகபட்சமாக 140 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, க்ருமா பானரின் பொறுப்பான சதத்தால்(123) முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் அடித்தது. 64  ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் (121) மற்றும் ஜோ ரூட் (109) ஆகிய இருவரின் பொறுப்பான சதத்தால் 2வது இன்னிங்ஸில் 349 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி.

கடைசி நாள் ஆட்டத்தில் 71 ஓவர்கள் எஞ்சியிருக்க 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. கடைசி நாள் ஆட்டத்தில் 71 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 286 ரன்கள் தேவைப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி  34.3 ஓவரில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பானரும் ஹோல்டரும் இணைந்து சிறப்பாக ஆடி, அடுத்த 35 ஓவருக்கு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடி போட்டியை டிரா செய்தது. போட்டி முடிய கடைசி 5 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டத்தை முடித்துக்கொள்ள முன்வந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற முயன்றது இங்கிலாந்து அணி. ஆனால் ஹோல்டர் மற்றும் பானர் ஆகிய இருவருமே 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங் ஆடி களத்தில் நன்றாக செட்டில் ஆகி விளையாடினர். வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் எஞ்சியிருந்த நிலையில், செட்டில் ஆன 2 பேட்ஸ்மேன்கள் விளையாடியதால், ஜோ ரூட் நினைத்திருந்தால் சில ஓவர்களுக்கு முன்பாகவே  போட்டியை முடித்திருக்கலாம். ஆனால், இனிமேல் ஆல் அவுட் செய்யவே முடியாது என்ற நிலை வந்தபிறகு, கடைசி 5 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் தான் போட்டியை முடித்துக்கொண்டார் ரூட். கடைசி ஓவரின் முதல் பந்து வீசிய பின்னர் ரூட் போட்டியை முடித்துக்கொண்டது, கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் எனுமளவிற்கா ரூட் நம்பினார் என்ற கேள்வி எழுப்பியது. ஆனால் உண்மையாகவே, ரூட் அந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்திருக்கமாட்டார்; சும்மா நக்கலாகத்தான் அப்படி செய்திருக்கிறார்.

இதையும் படிங்க - Rishabh Pant record: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்து ரிஷப் பண்ட் சாதனை..!

ரூட் மற்றும் இங்கிலாந்து அணியின் செயல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கர்லாஸ் பிராத்வெயிட்டை அதிருப்தியடைய செய்துள்ளது. இதே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளாக இருந்திருந்தால், இங்கிலாந்து அணி இப்படித்தான் செய்திருக்குமா? என்று பிராத்வெயிட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கர்லாஸ் பிராத்வெயிட், நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவோ அல்லது அணியின் சீனியர் வீரராகவோ டிரெஸிங் ரூமில் இருந்திருந்தால், இங்கிலாந்தின் செயலை அவமரியாதையாகத்தான் பார்த்திருப்பேன். 2 செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கிறார்கள்; பிட்ச்சில் எதுவுமே இல்லை. ஆனாலும் கடைசி 10 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என இங்கிலாந்து அணி நம்பியிருக்கிறது. கடைசி 5 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் தான், இங்கிலாந்து அணி போட்டியை முடித்துக்கொண்டது. 

இதே ஆஷஸ் தொடரிலோ, இந்தியாவிற்கு எதிராகவோ, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராகவோ இங்கிலாந்து இப்படி செய்திருக்குமா? என்றால் கண்டிப்பாக கிடையாது. பிறகு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மட்டும் ஏன் இப்படி செய்தது? இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த அணி என்பதை நிரூபிக்க இதுதான் சரியான வாய்ப்பு என்று கர்லாஸ் பிராத்வெயிட் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?