டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், இன்று நடக்கும் 20ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியானது விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. மேலும், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
டெல்லி கேபிடல்ஸ்:
மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலீஸ் கேப்ஸி, மரிசன்னே கேப், ஜேஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), சிகா ரெட்டி, மின்னு மணி.
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
லாரா வால்வார்ட், பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தயாளன் ஹேமலதா, போப் லிட்ச்பீல்டு, ஆஷ்லெக் கார்ட்னர், பாரதி ஃபுல்மாலி, கத்ரைன் பிரைஸ், தனுஜா கன்வர், ஷப்னம் முகமது ஷகில், மேக்னா சிங், மன்னட் காஷ்ய்ப்.