சச்சின் சாதனையை முறியடித்த கில்; நேற்றைய போட்டியின் சாதனைகள் லிஸ்ட் இதோ!

By Rsiva kumar  |  First Published May 16, 2023, 12:13 PM IST

சிக்ஸர் அடிக்காமல் அரைசதம் அடித்த சச்சினின் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.


குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 62ஆவது ஐபிஎல் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

இதில், சஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அஹமது ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், சுப்மன் கில் மட்டும் நிதானமாக ஆடி 101 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும். முதலில் 22 பந்துகளில் சிக்ஸர் இல்லாமல் அரைசதம் அடித்த கில், 32 பந்துகளில் 63 ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்காமல் அரைசதம் அடித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

முகமது ஷமி, மோகித் சர்மா வேகத்தில் சிக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற GT!

இந்த ஆண்டில் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சதமடித்துள்ளார். அதிலேயும், அகமதாபாத் மைதானத்தில் டெஸ்ட், டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ஐபிஎல் 2023: சதமடித்த 6ஆவது வீரர்:

நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்த 62 ஆவது போட்டியில் சுப்மன் கில் தனது முதல் சதத்தை அடித்து இந்த சீசனில் சதம் அடித்த 6ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, வெங்கடேஷ் ஐயர், ஹாரி ப்ரூக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிராப்சிம்ரன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தொடர்ந்து சதம் அடித்த 6ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக ஒரே மைதானத்தில் இந்த ஆண்டில் மட்டும் 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இந்த சீசனில் ஒரே மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?

இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் முதல் முறையாக 500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு 483 ரன்களும், 2021 ஆம் ஆண்டு 478 ரன்களும், 2020 ஆம் ஆண்டு 440 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், குஜராத் அணிக்காக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

Shubman Gill for Gujarat Titans in IPL:

Innings - 29
Runs - 1059
Average - 40.73
Strike Rate - 139.53
Fifties - 8
Hundred - 1

He has taken the game into the next level, A future great in making. pic.twitter.com/3Ir1q7rGjx

— Johns. (@CricCrazyJohns)

 

click me!