#AUSvsIND இந்திய வீரர்களுக்கு கெத்தை ஏற்றிவிட்டது நீங்கதான்..! ஆஸி., வீரர்களை விளாசிய மெக்ராத்

By karthikeyan VFirst Published Dec 18, 2020, 10:54 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த தவறை க்ளென் மெக்ராத் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே அடித்தது. கேப்டன் விராட் கோலியை தவிர வேறு யாருமே அரைசதம் கூட அடிக்கவில்லை. கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக கோலி 74 ரன்கள் அடித்தார். புஜாரா, ரஹானே ஆகியோர் ஓரளவிற்கு ஆடினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, பும்ரா மற்றும் அஷ்வினின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் 79 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் லபுஷேன் மட்டும் நிலைத்து நின்று 119 பந்துகளை எதிர்கொண்டு ஆடினார். ஆனால் அவரும் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்தி கெத்து காட்டினார் உமேஷ் யாதவ். லபுஷேன் ஆட்டமிழந்த பின்னர், கேப்டன் டிம் பெய்ன் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், 191 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. டிம் பெய்ன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் அடித்தார்.

53 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் அடித்துள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியின்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸி., முன்னாள் ஜாம்பவான் க்ளென் மெக்ராத், ஆஸி., அணி செய்த தவறை, 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கின்போது சுட்டிக்காட்டினார். 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கின்போது ஆஸி., அணி 48 ஓவர்கள் பேட்டிங் ஆடி வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 2க்கும் குறைவான ரன்ரேட்டில் ஆஸி., வீரர்கள் ஆடியிருந்தனர்.

அதனால் அதிருப்தியடைந்த க்ளென் மெக்ராத், ஆஸி., வீரர்கள் தடுப்பாட்டம் ஆடியதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. தவறான ஒரு பந்துக்காக காத்திருந்தனர். ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தது ஆஸி., பேட்ஸ்மேன்களின் ஆட்டம். 

ஆஸி., வீரர்கள் தடுப்பாட்டம் ஆடி, ஸ்கோர் செய்யாததால், அது இந்திய பவுலர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடங்களில் பந்துவீசி ஆஸி., வீரர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வழிவகை செய்தது. எனவே நீங்கள் வேகமாக ஸ்கோர் செய்யவில்லை என்றால், அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள் என்று மெக்ராத் தெரிவித்தார்.
 

click me!