அவரால் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சினை விட அதிக ரன்களை குவிக்க முடியும்.! உறுதியாக நம்பும் ஜெஃப்ரி பாய்காட்

Published : Jan 26, 2021, 04:12 PM IST
அவரால் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சினை விட அதிக ரன்களை குவிக்க முடியும்.! உறுதியாக நம்பும் ஜெஃப்ரி பாய்காட்

சுருக்கம்

ஜோ ரூட்டால் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சின் டெண்டுல்கரை விட அதிக ரன்களை குவிக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் உறுதியாக நம்புகிறார்.  

சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஜோ ரூட்டும் ஒருவர். விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த பெயரை கோலி, ஸ்மித், வில்லியம்சன் ஆகிய மூவரும் எல்லா நிலையிலும் பாதுகாத்து வந்தனர். ஆனால் ஜோ ரூட் டி20 கிரிக்கெட்டில் பெரியளவில் சாதிக்கவில்லை என்பதுடன், கடந்த ஓன்றரை ஆண்டுக்கும் மேலாகவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரியாக ஆடவில்லை.

எனவே ஜோ ரூட் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவந்தார். அந்த இடம் பாபர் அசாமுக்கு கிடைக்கும் நிலை உருவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக அபாரமாக ஆடி 3 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் ஒரு இரட்டை சதத்துடன், 426 ரன்களை குவித்து, தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த(228) ஜோ ரூட், 2வது டெஸ்ட்டிலும் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நெருங்கினார். ஆனால் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்து 14 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரூட்டின் கம்பேக்கிற்கு உதவியது. அடுத்ததாக இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஆடவுள்ள டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கும் ரூட்டுக்கும் முக்கியமானது.

இந்நிலையில், ஜோ ரூட்டை மிக உயர்வாக மதிப்பிட்டுள்ளார் ஜெஃப்ரி பாய்காட். ரூட் குறித்து பேசிய பாய்காட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன்களை குவித்த வீரர்கள் என்று டேவிட் கோவர், பீட்டர்சன் மற்றும் என்னையெல்லாம் விட்டுவிடுங்கள். ஜோ ரூட் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சின் டெண்டுல்கரை விட அதிக ரன்களை குவிக்க தகுதியான வீரர். ரூட்டுக்கு இப்போது 30 வயது. 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 8249 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்றால், சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் அதிக டெஸ்ட் ரன்கள் 15,921 என்ற ரெக்கார்டை ரூட் தகர்த்துவிடுவார் என்று பாய்காட் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!