முதல் போட்டியில் தோற்றதற்கு உங்க திமிரு தான் காரணம்.. இந்திய அணியை தெறிக்கவிட்ட கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Feb 27, 2019, 4:44 PM IST
Highlights

இந்திய அணி முதல் போட்டியில் தோற்றதற்கான காரணத்தை கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை குவித்திருந்தது. 3 விக்கெட் விழுந்தபிறகு ராகுலுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடி அரைசதமடித்த ராகுலின் விக்கெட் விழுந்தபிறகு இந்திய அணியின் ரன்ரேட் சரிய தொடங்கியது. தோனி கடைசிவரை களத்தில் நின்றும்கூட ரன்ரேட்டை மீட்டெடுக்கவே முடியவில்லை. 

தோனியை டெத் ஓவர்களில் அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. வெறும் 126 ரன்களை எடுத்த இந்திய அணி, அந்த எளிய இலக்கை எளிதாக எட்டவிடாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதம் அந்த அணிக்கு இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தது. அதனால் கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றியை பறித்தது ஆஸ்திரேலிய அணி.

கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரை அருமையாக வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. ஆனால் பும்ராவின் கடும் உழைப்பில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் கடைசி ஓவரை படுமோசமாக வீசி தோல்வியை தேடிக்கொடுத்தார் உமேஷ் யாதவ். 

முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இரண்டாவது போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்குகிறது.

இந்நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் தோற்றதற்கான காரணத்தை கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட்டதால்தான் இந்திய அணி, விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் தோற்றது என்று கவாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை வெற்றியுடன் கெத்தாக நாடு திரும்பியது இந்திய அணி. இந்நிலையில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியிடம் முதல் டி20 போட்டியில் தோற்றது. அதற்கு அந்த அணியை குறைத்து மதிப்பிட்டதுதான் காரணம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

click me!