மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் ஸ்மித்துக்கும் என்ன வித்தியாசம்..? எந்த குவாலிட்டி அவர வித்தியாசப்படுத்துகிறது..? கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 26, 2019, 4:46 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைலும் பேட்டிங் டெக்னிக்கும் வித்தியாசமானது. ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரில் செம கம்பேக் கொடுத்தார் ஸ்மித். 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்து மிரட்டிய ஸ்மித், ஆஸ்திரேலிய அணி பெற்ற 2 வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 
 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிவைத்து, ஒரே தொடரில் முதலிடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிட்டார் ஸ்மித். ஆஷஸ் தொடரில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அவரை வீழ்த்துவதே இங்கிலாந்துக்கு பெரிய கஷ்டமாகிவிட்டது. 

இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அவர் தான் திகழ்ந்தார். ஸ்மித்தின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இந்த தொடரில் ஆடிய இன்னிங்ஸ்களும் அடங்கும். ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வெற்றிகரமான வீரராக ஸ்மித் திகழ்கிறார். அந்தளவிற்கு தொடர்ச்சியாக அடித்து ரன்களை குவித்தார். 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்து அசத்தினார். ஆஷஸ் தொடரில் ஸ்மித்தின் பேட்டிங், கோலி - ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்கிற விவாதத்தை எழுப்பியது. 

ஸ்மித்தின் பேட்டிங் டெக்னிக்கை சிலர் படுமோசம் என கடுமையாக விமர்சித்தனர். ஜாண்டி ரோட்ஸ் கூட கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அவரது பேட்டிங் டெக்னிக்கோ ஸ்டைலோ எப்படி இருந்தால் என்ன..? அதுவா முக்கியம்.. அவுட்புட் நல்லா வருதா என்பதுதானே முக்கியம். அந்தவகையில் ஸ்மித் சிறந்த வீரர்தான். அவரது பேட்டிங் அவரது அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்கிறது. அதைவிட வேற என்ன வேண்டும்..?

ஸ்மித்தின் பேட்டிங் டெக்னிக்கை சிலர் விமர்சித்தாலும், அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஏனெனில் அவர் அபாரமான, தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில், மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து ஸ்மித்தை எது வேறுபடுத்துகிறது என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், நிதானமான மனநிலையை பற்றி நான் எப்போதுமே பேசிவந்திருக்கிறேன். நல்ல பேட்டிங் டெக்னிக்கை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. என்னை பொறுத்தமட்டில், நிதானமான தெளிவான மனநிலை தான் பசங்களிடமிருந்து(முதிர்ச்சியற்ற) ஆண்களை(முதிர்ச்சியுடைய) வித்தியாசப்படுத்துகிறது. ஓரளவிற்கு நல்ல பேட்டிங் டெக்னிக்கை பெற்றிருந்தால் போதும். ஆனால் நிதானமான மனநிலையுடன் ஆடவேண்டும். அதை ஸ்மித் பெற்றிருக்கிறார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதுதான் அவர் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக வலம்வர காரணமாகவும் கவாஸ்கர் கருதுகிறார். 
 

click me!