சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த என்ன செய்யணும்..? பாகிஸ்தான் முன்னாள் வீரரின் அதிரடி ஆலோசனை

By karthikeyan VFirst Published Oct 26, 2019, 4:41 PM IST
Highlights

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அதுவும் பாகிஸ்தானுக்கு சுத்தமாக முடியாத காரியம். ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். 

ஸ்மித் மற்றும் வார்னர் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மண்ணில் வைத்து அந்த அணியை தெறிக்கவிட்டது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில், சொந்த மண்ணில் சொல்லவே தேவையில்லை. 

ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ள அதேவேளையில், புதிய கேப்டனின் தலைமையில் அந்த அணியை எதிர்கொள்ளவுள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் நீக்கப்பட்டு அசார் அலி டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் ஒவ்வொரு போட்டியின் முடிவும் மிக முக்கியம். பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக சொதப்பி தரவரிசையில் கீழே கிடக்கிறது. அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தாததால் படுமோசமான நிலையில் உள்ளது. 

அப்படியிருக்கையில், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. இந்நிலையில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியை திறம்பட எதிர்கொள்ள முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா ஒரு ஆலோசனை கூறியுள்ளார். 

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ரமீஸ் ராஜா, மிஸ்பா உல் ஹக் ஒரு விஷயத்தை நன்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்த வேண்டுமென்றால், அணியில் அனுபவ வீரர்கள் நிறைய இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்களாக இல்லையென்றாலும், அதிகமான உள்நாட்டு போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட திறமையான உள்நாட்டு வீரர்கள் நிறைய உள்ளனர். அவர்கள் அந்த குறையை தீர்ப்பார்கள் என ரமீஸ் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.  
 

click me!