பும்ராவை குறை சொல்றவங்க முதல்ல கண்ணாடில நின்னு பாருங்க.. யாருப்பா அவங்க..? பும்ராவுக்காக வரிந்துகட்டிய முன்னாள் ஜாம்பவான்கள்

By karthikeyan VFirst Published Sep 2, 2019, 2:34 PM IST
Highlights

பும்ராவின் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் தான் அவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது. துல்லியமான மற்றும் நேர்த்தியான பவுலிங்கின் மூலம் எதிரணி வீரர்களை திணறடிக்கிறார் பும்ரா. பும்ராவின் பவுலிங்கை பல முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்தாலும், சிலர் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்த சந்தேகத்தை கிளப்பவும் செய்கிறார்கள். 

இந்திய அணி பும்ராவின் வருகைக்கு பின் சிறந்த பவுலிங் யூனிட்டாக உருவெடுத்துள்ளது. பேட்டிங் அணியாக மட்டுமே இருந்துகொண்டிருந்த இந்திய அணியின் பவுலிங்கிற்கு புதிய பரிமாணம் கொடுத்தவர் பும்ரா. பும்ராவை மையமாக வைத்துத்தான் இந்திய அணியின் பவுலிங் இயங்குகிறது. 

பும்ராவின் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் தான் அவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது. துல்லியமான மற்றும் நேர்த்தியான பவுலிங்கின் மூலம் எதிரணி வீரர்களை திணறடிக்கிறார் பும்ரா. பும்ராவின் பவுலிங்கை பல முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்தாலும், சிலர் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்த சந்தேகத்தை கிளப்பவும் செய்கிறார்கள். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் பும்ரா. அப்போது இயன் பிஷப்பும் கவாஸ்கரும் கமெண்ட்ரி செய்துகொண்டிருந்தனர். 

பும்ராவின் அபாரமான பவுலிங்கை பாராட்டிய இயன் பிஷப், பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷனை சிலர் சந்தேகிக்கிறார்கள். அதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பும்ரா வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்டிருக்கிறார். கிரிக்கெட் விதிகளுக்குட்பட்ட பவுலிங் ஆக்‌ஷன் தான் அது. உண்மையாகவே பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷனை சந்தேகிப்பவர்கள், கண்ணாடி முன் நின்று அவர்களை பார்க்க வேண்டும் என்று இயன் பிஷப் தெரிவித்தார். 

இதைக்கேட்ட கவாஸ்கர், உடனடியாக யார் அவர்கள்? பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷனை சந்தேகிப்பவர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டார். ஆனால் இயன் பிஷப் பதிலளிக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து பேசிய கவாஸ்கர், அவரது பவுலிங்கை நன்றாக பாருங்கள். கொஞ்ச தூரம் மட்டுமே ஓடிவருகிறார்; அவரது மூமண்ட்டத்தை பெறுகிறார், பின்னர் கைகளை நேராக வைத்து வீசுகிறார். இதில் எங்கே அவரது கை மடங்குகிறது? அவர் மிகச்சரியாக வீசுகிறார் என்று கவாஸ்கர் தெரிவித்தார். 
 

click me!