அவங்க 2 பேரையும் எடுக்க முடியாத விரக்தியில் கும்ப்ளே இப்படி பண்ணிட்டாரு.. ஆனால் அந்த வீரர் அவ்வளவு தொகைக்கு வொர்த் இல்ல.. கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 20, 2019, 12:38 PM IST
Highlights

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. 
 

2020ல் நடக்கவுள்ள ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் உள்ளன. 

பஞ்சாப் அணி கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்த அஷ்வினை கழட்டிவிட்டு, கேஎல் ராகுலை புதிய கேப்டனாக நியமித்தது. நேற்று கொல்கத்தாவில் நடந்த ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸின் ஃபாஸ்ட் பவுலர் ஷெல்டான் கோட்ரெலை ரூ.8.5 கோடிக்கும் எடுத்தது. 

கிறிஸ் ஜோர்டான் மற்றும் நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகியோரையும் பஞ்சாப் அணி எடுத்தது. உள்நாட்டு வீரர்களான ரவி போஷ்னோய், பிரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, இஷான் போரெல், தஜீந்தர் திலான் ஆகியோரையும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில், ரூ.8.5 கோடிக்கு தகுதியில்லாத கோட்ரெலை அவ்வளவு தொகை கொடுத்திருக்க வேண்டிய தேவையில்லை எனவும் ஆனால் அந்த நிலைக்கு பஞ்சாப் அணி தள்ளப்பட்டதாகவும் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், பாட் கம்மின்ஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரையும் எடுக்க பஞ்சாப் அணி ஆர்வம் காட்டியது. அதற்காக கடுமையாக முயன்றது. ஆனால் அவர்கள் இருவரையும் அந்த அணியால் எடுக்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு கோட்ரெலை விட சிறந்த ஆப்சன் இல்லை. எனவே வேறு வழியில்லாமல் கோட்ரெலுக்கு ரூ.8.5 கோடி கொடுத்து எடுத்துள்ளது பஞ்சாப் அணி. ஆனால் அவர் அந்த தொகைக்கான அளவிற்கு தகுதியான வீரர் இல்லை. 

கோட்ரெல் 145 கிமீ வேகத்தில் வீசுகிறார். ஆனால் துல்லியமாக வீசும் திறமையை அவர் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் ஃபாஸ்ட் பவுலிங்கில் கட்டர்கள் வீச முயல்கிறார். அது மொஹாலி ஆடுகளத்தில் எடுபடாது. பாட் கம்மின்ஸ் மற்றும் மோரிஸ் ஆகிய இருவரையும் எடுக்க முடியாத விரக்தியில் தான் கோட்ரெலை ரூ.8.5 கோடிக்கு கும்ப்ளே எடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதிகமான கிராக்கி இருக்கும்போது, அதற்கேற்ற வீரர்கள் நிறையபேர் ஏலத்தில் இல்லை என்றால் இதுதான் நடக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

click me!