ஒரு எம்.பி.,யா பொறுப்பா மீட்டிங்குக்கு போகாம ஜாலியா பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுகிட்ட இருக்க.. வசமா சிக்கிய கம்பீரை வச்சு செய்யும் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Nov 15, 2019, 4:43 PM IST
Highlights

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 
 

கிரிக்கெட் வீரர்களில் மிகவும் நேர்மையான மற்றும் வெளிப்படையான வீரர் கவுதம் கம்பீர். தனக்கு தவறு என்று பட்டால், விளைவுகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேரடியாக உண்மையை பேசக்கூடிய துணிச்சல் மிக்கவர். டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு குறித்து அடிக்கடி டுவீட் செய்து வந்தார் கம்பீர். 

காற்று மாசு குறித்து டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசை விமர்சிக்கும் விதமாக டுவீட் செய்துவந்தார். இந்நிலையில், காற்று மாசை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று டெல்லியில், நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்களில் கம்பீரும் ஒருவர். 

ஆனால் கம்பீர் இந்தூரில் நடந்துவரும் இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிக்கு வர்ணனை செய்ய சென்றுவிட்டதால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கம்பீர், லட்சுமணன் ஆகிய வர்ணனையாளர்கள் காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட புகைப்படத்தை லட்சுமணன் டுவிட்டரில் பதிவு செய்ய, கம்பீர் சிக்கலில் சிக்கினார். 

காற்று மாசு குறித்து கருத்துகளை தெரிவித்துவரும் கம்பீர், அதை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஜாலியாக இருப்பதை கண்ட, டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி சும்மா விடுமா..? கவுதம் கம்பீரை கடுமையாக தாக்கி டுவீட் செய்துள்ளது. ரசிகர்களும் கம்பீரின் செயலை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

click me!