சேவாக் பாணியில் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால்.. பிராட்மேனையே தூக்கியடித்து அபார சாதனை

By karthikeyan VFirst Published Nov 15, 2019, 3:56 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார் மயன்க் அகர்வால்.
 

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் அக்டோபர் 14ம் தேதி(நேற்று) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த புஜாரா, வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக ஆடி பவுண்டரிகளாக விளாசி 72 பந்துகளில் 54 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வந்த கேப்டன் கோலி, இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய மயன்க் அகர்வாலுடன் ரஹானே ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசன் முழுவதும் விக்கெட்டை இழக்காமல் ஆடினர்.

சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் சதமடித்தார். அவரை தொடர்ந்து ரஹானே அரைசதம் அடித்தார். டீ பிரேக்கின்போது மயன்க் அகர்வால் 150 ரன்களை கடந்தும் ரஹானே 80 ரன்களை கடந்தும் களத்தில் இருந்தனர். டீ பிரேக் முடிந்து வந்ததும் ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலும் ரஹானேவும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 190 ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்தார்.

இதையும் படியுங்கள்:-சபரிமலை பக்தர்களை அதிர வைக்கும் போராளி... விரக தாபம் எடுக்கவைக்கும் ஆபாச புகைப்படங்கள்...!

196 ரன்கள் இருந்தபோது, சேவாக் பாணியில் சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தை எட்டினார் மயன்க். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரண்டு இரட்டை சதங்களை விரைவில் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை மயன்க் அகர்வால் படைத்துள்ளார். மயன்க் அகர்வால் தனது முதல் 12 இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதத்தை விளாசியுள்ளார். வினோத் காம்ப்ளி முதல் 5 இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதத்தை விளாசியிருக்கிறார். வினோத் காம்ப்ளிக்கு அடுத்த இடத்தை மயன்க் அகர்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் டான் பிராட்மேன் இருக்கிறார். 

இதையும் படியுங்கள்:- அதிர வைக்கும் சபரிமலை போராளி ரெஹானா ஃபாத்திமா... இந்த ஆண்டு போராட்டத்திற்கு முன் நிர்வாண வீடியோ..!
 

click me!