அவரு ஒருநாள் போட்டிக்கு ரெடியாகிட்டாரு.. ஃபாஸ்ட் பவுலருக்கு ஆதரவா ஒண்ணா சேர்ந்து குரல் கொடுத்த கங்குலி - பாண்டிங்

By karthikeyan VFirst Published Mar 20, 2019, 9:34 PM IST
Highlights

மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுவதற்கு காரணங்களில் ஒன்று, பவுலிங் யூனிட். முன்னெப்போதையும் விட வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக இந்திய பவுலிங் திகழ்கிறது. 
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, உலக கோப்பைக்கான அணியில் 12-13 வீரர்களை உறுதி செய்துவிட்டது. எஞ்சிய 2-3 வீரர்களை மட்டுமே உறுதி செய்ய வேண்டும். 

மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுவதற்கு காரணங்களில் ஒன்று, பவுலிங் யூனிட். முன்னெப்போதையும் விட வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக இந்திய பவுலிங் திகழ்கிறது. 

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். ஹர்திக் பாண்டியா நான்காவது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாக உள்ளார். எனினும் அவர் பார்ட் டைம் பவுலர் தான். அதனால் நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேவை அணியில் உள்ளது. 

அந்த வகையில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக உலக கோப்பைக்கு அழைத்து செல்ல கலீல் அகமது பரிசோதிக்கப்பட்டார். ஆனால் கலீல் அகமதுவின் பவுலிங்கில் வேகம் இல்லை. உமேஷ் யாதவும் ஏமாற்றிவிட்டார். உமேஷ் யாதவ் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவருமே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 

கடந்த சீசனில் ஐபிஎல்லிலும் புறக்கணிக்கப்பட்டார் இஷாந்த் சர்மா. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக பந்துவீசியதை அடுத்து, இந்த சீசனில் அவரை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்துள்ளது. ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசி உலக கோப்பை அணியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக இணையும் முனைப்பில் உள்ளார் இஷாந்த் சர்மா. 

இந்நிலையில், அவர் முன்பைவிட தற்போது நன்றாக தேறிவிட்டதாகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட தகுதி பெற்றுள்ளதாகவும் கங்குலி மற்றும் பாண்டிங் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். இஷாந்த் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடுகிறார். அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் கங்குலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரும் இஷாந்த் சர்மாவின் பவுலிங்கை வலைப்பயிற்சியில் பார்த்தனர். அவர் சிறப்பாக பந்துவீசுவதை பார்த்து, அண்மைக்காலமாக நன்றாக வீசிவரும் இஷாந்த் சர்மாவின் பவுலிங், முன்பைவிட தற்போது முதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவரது கெரியரில் தற்போதுதான் நல்ல ஃபார்மில் இருப்பதாகவும் ஒருநாள் போட்டிகளில் ஆட அவர் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் முன்பைவிட தற்போது யார்க்கர்களை துல்லியமாக வீசுவதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

click me!