இதுவே தோனியா இருந்தா அதே சம்பவம் வேற மாதிரி இருந்திருக்கும்!! வீடியோ

By karthikeyan VFirst Published Mar 20, 2019, 4:49 PM IST
Highlights

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டுமினி ரன் அவுட்டாக, கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. 

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கை அணியும் ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணியும் வென்றன. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்களை அடித்தது. 135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் முதல் 3 விக்கெட்டுகள் பெரிதாக ஆடாத நிலையில், டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் இணைந்து நன்றாக ஆடினர். அவர்கள் இருவரும் அவுட்டானதை அடுத்து மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டுமினி ரன் அவுட்டாக, கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை இம்ரான் தாஹீர் அடிக்காமல் விட்டுவிட, ஆனாலும் ஸ்டெயினும் அவரும் ஒரு ரன் ஓடினர். அப்போது பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்திருக்கலாம். ஈசியான ரன் அவுட் வாய்ப்புதான். ஸ்டம்பிலிருந்து வெறும் 2 மீட்டர் பின்னால் நின்ற டிக்வெல்லாவால் ஸ்டம்பில் சரியாக அடிக்க முடியாததால் போட்டி டிராவானது. பின்னர் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. 

டிக்வெல்லா சரியாக ஸ்டம்பில் அடித்திருந்தால், ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் டிக்வெல்லா அருமையான வாய்ப்பை தவறவிட்டார். குளௌசை கழட்டிவிட்டு அடித்திருந்தால், ஸ்டம்பில் அடித்திருக்கலாம். ஆனால் டிக்வெல்லா அதை செய்யவில்லை. இதுவே இந்நேரம் தோனியாக இருந்திருந்தால், பந்தை பிடித்த அடுத்த நொடியே குளௌஸ் பறந்திருக்கும். ஒருவேளை மறுமுனையில் இருந்து ஓடிவந்த வீரர் கிரீஸை நெருங்கியிருந்தாலும் எதிர்முனைக்கு பந்தை வீசி ரன் அவுட் செய்திருப்பார் தோனி. ஆனால் டிக்வெல்லா அருமையான வாய்ப்பை மொக்கையாக தவறவிட்டார். 

Niroshan Dickwella has missed the easiest run-out of his life. Length ball on off, and Dickwella tries to cut, but the ball's been under-edged to Dickwella. Steyn runs from the other end, and Dickwella takes aim at all three stumps, but he misses! pic.twitter.com/kas1yJdfkS

— Deepak (@TaleAndhera)
click me!