தம்பி கோலி இப்படியே பண்ணிகிட்டு இருந்தீங்கன்னா நல்லா இருக்காது.. தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Aug 24, 2019, 2:25 PM IST
Highlights

விராட் கோலியின் கேப்டன்சியிலும் அவரது அணுகுமுறையிலும் நிறைய குறைகள் உள்ளன. அணி தேர்வில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கருத்தில்கொண்டு செயல்படுவதை கோலி தொடர்ந்து செய்துவருகிறார். அணி தேர்வில் அவர் பாரபட்சம் காட்டுவது அப்பட்டமாக தெரிகிறது. 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னின்று அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். ஒரு கேப்டன் சிறப்பாக ஆடினால்தான், வீரர்களுக்கு அது முன்னுதாரணமாகவும் உத்வேகமாகவும் அமையும். அந்தவகையில் கோலி சிறப்பாக ஆடி முன்னின்று வழிநடத்துகிறார். 

ஆனால் விராட் கோலியின் கேப்டன்சியிலும் அவரது அணுகுமுறையிலும் நிறைய குறைகள் உள்ளன. அணி தேர்வில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கருத்தில்கொண்டு செயல்படுவதை கோலி தொடர்ந்து செய்துவருகிறார். அணி தேர்வில் அவர் பாரபட்சம் காட்டுவது அப்பட்டமாக தெரிகிறது. 

சில வீரர்கள் சரியாக ஆடாவிட்டாலும் அவர்களை தொடர்ச்சியாக அணியில் எடுப்பதையும், சில வீரர்கள் நன்றாகவே ஆடினாலும் வேண்டுமென்றே ஓரங்கட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அணி தேர்வு சரியில்லாததால் தான் உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்று வெளியேற நேரிட்டது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு கணிசமான வாய்ப்பளித்து திறமையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதைவிடுத்து சும்மா சும்மா வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பது, அவர்களது தன்னம்பிக்கையை சிதைப்பதோடு, கிடைக்கும் ஏதாவது சில வாய்ப்புகளில் கண்டிப்பாக நன்றாக ஆடியே தீர வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகரிக்கும். 

இதுமாதிரியான நிலையற்ற தன்மையை தொடர்ச்சியாக உருவாக்கிவருகிறார் கோலி. அப்போதைக்கு என்ன தேவையென்று பார்ப்பதை விட, வலுவான மற்றும் நிலையான அணியை உருவாக்க முயல்வதுதான் அணியின் நிலைத்தன்மைக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. அதை செய்ய, தொடர்ந்து தவறிவருகிறார் கேப்டன் கோலி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஓரங்கட்டப்பட்டுள்ளார். கோலிக்கும் அஷ்வினுக்கும் ஆகாது என்பது ஊரறிந்த உண்மை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும், மனதுக்குள் ஈகோ இருப்பது அஷ்வினின் புறக்கணிப்பிலேயே தெரிகிறது. அதேபோல ரோஹித்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அணி தேர்வு குறித்து கேப்டன் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, விராட் கோலி அணி தேர்வு விஷயத்தில் கொஞ்சம் நிலைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆட்டம் மேம்படும் என்று கோலிக்கு கங்குலி அறிவுரை கூறியுள்ளார். 

கோலிக்கு சொல்லப்படும் அறிவுரைகள் எல்லாமே செவுடன் காதில் ஊதப்படும் சங்கு மாதிரிதான். 
 

click me!