ரோஹித்தை கொஞ்ச நாள் அவருகிட்ட ட்ரைனிங் அனுப்புங்க.. அப்புறம் வேற லெவல்ல ஆடுவாரு.. கம்பீர் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Aug 7, 2019, 5:04 PM IST
Highlights

2013ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்ட ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக வெறும் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 1585 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா, தலைசிறந்த ஒருநாள் மற்றும் டி20 வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது டெஸ்ட் கெரியர் இதுவரை நன்றாக அமையவில்லை. 

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் விளாசிய ஒரே வீரராக கெத்தாக வலம்வரும் ரோஹித் சர்மா, அசால்ட்டாக சதம் விளாசக்கூடியவர். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை குவித்து தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித்துக்கு டெஸ்ட் வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை. 

2013ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்ட ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக வெறும் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 1585 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவ்வப்போது டெஸ்ட் அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருக்கும் ரோஹித், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கம்பீர் எழுதியுள்ள கட்டுரையில், ரோஹித் சர்மா கண்டிப்பாக பெரிய டெஸ்ட் வீரராக ஜொலிப்பார் என அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதோடு, ரோஹித் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ ஒரு ஆலோசனையையும் வழங்கியுள்ளார். 

இதுகுறித்து எழுதியுள்ள கம்பீர், ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர். ஆனால் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை யாராவது கண்டிப்பாக சொல்ல வேண்டிய தருணம் இது என நினைக்கிறேன். ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய இன்னிங்ஸ் ஆடி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இருக்கும் ஃபார்மை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர வேண்டும். ராகுல் டிராவிட் அல்லது சச்சின் டெண்டுல்கரிடம் ரோஹித்தை சில மாதங்கள் பயிற்சி எடுக்க வைக்க வேண்டும். அவர்கள் ரோஹித்தின் பேட்டிங்கை மேம்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தி அனுப்பிவிடுவார்கள் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

click me!