கேப்டன் தான் தைரியமா அதை செய்யணும்.. தோனி விஷயத்தில் கேப்டனுக்கு சவால் விடும் கம்பீர்

By karthikeyan VFirst Published Sep 30, 2019, 5:16 PM IST
Highlights

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வும் பெறாமல், அணியிலும் ஆடாமல் மௌனம் காத்துவருகிறார் தோனி. அவருக்கு ஆதரவாக தேர்வுக்குழு, அணி நிர்வாகம் என அனைத்துமே செயல்படுகிறது. 
 

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் அவரது கெரியர் முடிந்துவிட்டது. எனவே அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை உருவாக்கும் பணியை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தொடங்கிவிட்டது. அதுவும் அடுத்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் என தொடர்ச்சியாக 2 டி20 உலக கோப்பை நடத்தப்படவுள்ளது. எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அடுத்த விக்கெட் கீப்பரை தயார் செய்யும் பணியில் அணி நிர்வாகம் இறங்கிவிட்டது. 

எனவே தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் இந்திய அணியில் இடம்பிடிப்பது சந்தேகம்தான். ஆனால் அவரை அணி நிர்வாகமோ தேர்வுக்குழுவோ ஓரங்கட்டாத மாதிரியும் அவரே சில தொடர்களிலிருந்து தானாக முன்வந்து ஒதுங்குவது போன்ற தோற்றமும் உருவாக்கப்படுகிறது. 

உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, ஓய்வும் அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் இந்திய அணியிலும் இடம்பெறுவதில்லை. ராணுவ பயிற்சிக்கு செல்வதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து ஒதுங்கினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தோனி அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் தோனி விலகியுள்ளார். 

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், ஓய்வு என்பது அந்த குறிப்பிட்ட வீரரின் தனிப்பட்ட முடிவு. ஓய்வுபெறும் வரை அணியில் ஆடவேண்டும். அதேநேரத்தில் அணியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  தோனி கண்டிப்பாக அடுத்த உலக கோப்பையில் ஆடமாட்டார். எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; உங்கள் காலம் முடிந்துவிட்டது என்பதை கேப்டன் தைரியமாக எடுத்துக்கூற வேண்டும். ஏனெனில் தோனியின் இடத்தை நிரப்பும் வீரரை உருவாக்குவதற்கு நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிடும். இது தோனியின் எதிர்காலம் குறித்த பிரச்னையல்ல. இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால பிரச்னை. 

தோனி அடுத்த உலக கோப்பையில் ஆடுவாரா மாட்டாரா என்பது முக்கியமில்லை. உலக கோப்பையை வெல்வதே முக்கியம். எனவே ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற இள்ம வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். என்னை கேட்டால், தோனியை கடந்து யோசிக்க வேண்டிய தருணம் இது என்று கூறுவேன் என வழக்கம்போலவே தனது கருத்தை கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

click me!