அந்த மாதிரிலாம் எதையும் பண்ணிடாதீங்க.. முன்கூட்டியே எச்சரிக்கும் கம்பீர்

By karthikeyan VFirst Published Jul 16, 2019, 11:18 AM IST
Highlights

கேப்டனை மாற்றுவது குறித்த கருத்துகளும் உலாவருகின்றன. ஒருநாள் அணிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவரே, ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம் என கருத்து தெரிவித்துள்ளார். 
 

உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. உலக கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய அணியை வலுவாக கட்டமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பது தெரிகிறது. 

கேப்டனை மாற்றுவது குறித்த கருத்துகளும் உலாவருகின்றன. ஒருநாள் அணிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவரே, ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம் என கருத்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், உலக கோப்பை முடிந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு செல்கிறது. 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது.

இந்த தொடரில் கேப்டன் கோலி, தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் ரோஹித்தின் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நிறைய வீரர்களுக்கு ஓய்வளிக்கக்கூடாது என்பது கம்பீரின் கருத்து.

 

தோனியின் பேட்டிங் நிலையை தவிர வேறு எதையும் மாற்றுவது குறித்து யோசிக்க தேவையில்லை. ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமான வீரர்கள். எனவே அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என கருத்து பரவிவந்த நிலையில், விராட் கோலி ஒருநாள் தொடரில் ஆடுவார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரை சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் இப்போதுதான் உலக கோப்பையில் தோற்றுள்ளோம் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை குறைத்து மதிப்பிட்டு அதிலும் தோற்றுவிட்டால் அணியின் நம்பிக்கையை அது சீர்குலைக்கும். எனவே சிறந்த அணியுடன் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வது அவசியம். 
 

click me!