ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக நான் ரெடி.. தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஆர்வம்

By karthikeyan VFirst Published May 6, 2019, 3:29 PM IST
Highlights

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை அதிரடியாக நீக்கிவிட்டு பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் இந்த சீசனிற்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த சீசனிலும் ஆர்சிபி அணி சோபிக்கவில்லை. 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனிலாவது முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, பிளே ஆஃபிற்கே தகுதிபெறாமல் வெளியேறியது. 

இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடந்த சீசனிலேயே கோப்பையை வெல்லும் முனைப்புடன் தான் ஆடியது. ஆனால் கடந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெறவில்லை. இந்த சீசனில் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தலைமை பயிற்சியாளர் அதிரடியாக மாற்றப்பட்டார். 

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை அதிரடியாக நீக்கிவிட்டு பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் இந்த சீசனிற்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த சீசனிலும் ஆர்சிபி அணி சோபிக்கவில்லை. சீசனின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்றிருந்தாலும் அதன்பின்னர் எஞ்சிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி மற்றும் ஒரு போட்டி முடிவில்லாமல் போனதால் ஒரு புள்ளி என மொத்தம் 11 புள்ளிகளை பெற்றது ஆர்சிபி. 

கூடுதலாக ஒரு வெற்றி பெற்றிருந்தால் கூட பிளே ஆஃபிற்கு முன்னேறியிருக்கும் ஆர்சிபி. இந்த சீசனும் அந்த அணிக்கு சோகமாக முடிந்துள்ள நிலையில், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆர்வமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆர்சிபி அணி புதிய பயிற்சியாளரை தேடுவதாக இருந்தால் சொல்லுங்கள்.. நான் தயாராக இருக்கிறேன் என்று கிப்ஸ் தெரிவித்துள்ளார். கிப்ஸின் இந்த ஆர்வமிகுதியான அலெர்ட் மெசேஜுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐபிஎல்லில் கிப்ஸ் ஆடியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ்(சன்ரைசர்ஸ்) அணியில் ஆடினார். அவர் அணியில் ஆடிய சமயத்தில் தான் 2009ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!