கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வாங்கி கட்டிய கோலி இப்போ வாரி குவிக்கிறாரு

By karthikeyan VFirst Published Jun 24, 2019, 5:49 PM IST
Highlights

விராட் கோலியின் கேப்டன்சி உலக கோப்பைக்கு முன்புவரை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் உலக கோப்பையில் விராட் கோலி சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார்.
 

விராட் கோலியின் கேப்டன்சி உலக கோப்பைக்கு முன்புவரை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் உலக கோப்பையில் விராட் கோலி சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார்.

கள வியூகம், பவுலிங் சுழற்சி மற்றும் உத்தி ரீதியாக விராட் கோலியின் கேப்டன்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஐபிஎல்லில் அவரது மோசமான கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார் கவுதம் காம்பீர். ஒரு முறை கூட ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாத விராட் கோலியை இன்னும் ஆர்சிபி அணியின் கேப்டனாக வைத்திருப்பதற்கு அவர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று காம்பீர் விமர்சித்திருந்தார். 

ஆனால் கோலியின் கேப்டன்சி கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. உலக கோப்பையில் நன்றாகவே கேப்டன்சி செய்துவருகிறார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 224 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி, 213 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியை சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பதற்றப்படாமல் அருமையாக பவுலிங் சுழற்சி செய்து, நல்ல ஃபீல்டிங் செட்டப் மற்றும் களவியூகத்துடன் திட்டங்களை தெளிவாக செயல்படுத்தினார் விராட் கோலி. அதனால் கடைசிவரை போராடி இந்திய அணி வெற்றியை பறித்தது. 

இதையடுத்து விராட் கோலியின் கேப்டன்சியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருந்த நிலையில், முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் பாராட்டியுள்ளார். விராட் கோலி புத்திசாலித்தனமாக கேப்டன்சி செய்தார். கோலியின் அபாரமான கேப்டன்சியால் தான் இந்திய அணி இறுதியில் த்ரில் வெற்றி பெற்றது என்று ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். 

விராட் கோலியின் கேப்டன்சி விமர்சனத்துக்கு உள்ளான காலம் போயி, சச்சின், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பாராட்டுகளை குவித்துவருகிறார். 
 

click me!