ஆல்டைம் பெஸ்ட் லெவனில் ஒரேயொரு இந்திய வீரருக்குத்தான் இடம்.. அந்த ஒருவரும் தமிழர்.. சத்தியமா அஷ்வின் இல்ல.. யாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Aug 27, 2019, 3:49 PM IST
Highlights

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தேர்வு செய்துள்ள ஆல்டைம் பெஸ்ட் லெவனில் ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடமளித்துள்ளார். அவரும் கடைசி வீரர். 

முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்வது வழக்கம். 

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் தனது ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தனது சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். 

அந்த அணியில் ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடமளித்துள்ளார். சச்சின், டிராவிட், லட்சுமணன், கோலி, அஷ்வின், சேவாக் என டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய ஒரு வீரருக்கு கூட அணியில் இடமளிக்கவில்லை. அவரது அணியின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் மற்றும் மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக ஹாசிம் ஆம்லாவையும் நான்காம் வரிசை வீரராக கெவின் பீட்டர்சனையும், ஐந்தாம் வரிசை வீரராக ஜாய்ஸையும்(இங்கிலாந்து-அயர்லாந்து) தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கும் அணியில் இடமளித்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் ப்ராட் ஆகிய இருவரையும் ஸ்பின் பவுலராக இந்திய வீரர் முரளி கார்த்திக்கையும் காம்ப்டன் தேர்வு செய்துள்ளார். 

நிக் காம்ப்டன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி:

அலெஸ்டர் குக், ஃபிலிப் ஹியூக்ஸ், ஹாசிம் ஆம்லா, கெவின் பீட்டர்சன், எத் ஜாய்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, வெர்னான் ஃபிலாண்டர், மிட்செல் ஸ்டார்க், ஸ்டூவர்ட் பிராட், முரளி கார்த்திக்.
 

click me!