நான் ஆடுனதுலாம் என்னங்க ஆட்டம்..? அவருதாங்க லெஜண்ட்.. பென் ஸ்டோக்ஸ் புகழாரம்

By karthikeyan VFirst Published Aug 27, 2019, 1:59 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், அந்த போட்டியின் நாயகன் பென் ஸ்டோக்ஸ், தனது சக வீரர் ஒருவரை லெஜண்ட் என புகழ்ந்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த போட்டிகளில் ஒன்று. அதில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்கும் வரலாற்றில் என்றுமே அழிக்கமுடியாத இன்னிங்ஸ்.

லீட்ஸில் நடந்த ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் அடிக்க, அதுவே பரவாயில்லை எனுமளவிற்கு வெறும் 67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி. 

112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் தேவைப்பட்டது. 

359 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் ராய் ஆகிய இருவரும் மறுபடியும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, ரூட்டும் டென்லியும் சேர்ந்து அதை செய்து கொடுத்தனர். 

அரைசதம் அடித்த அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு மீண்டும் நெருக்கடி அதிகரித்தது. ஸ்டோக்ஸ் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் பேர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ஆர்ச்சர், ப்ராட் என விக்கெட்டுகள் சரிந்தன. 286 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இங்கிலாந்து அணியிடம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், வெற்றிக்கு 73 ரன்கள் தேவை. அதன்பின்னர் அதிரடியை கையில் எடுத்த ஸ்டோக்ஸ், ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் என பாரபட்சம் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 

ஸ்டோக்ஸ் ஒருமுனையில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கொண்டிருக்க, மறுமுனையில் தனது விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடினார் லீச். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், விக்கெட் சரிவிற்கு பின்னர், இக்கட்டான சூழலில் ரிஸ்க் எடுத்து ஆடினார். 70 பந்துகளுக்கு மேல் ஆடி வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஸ்டோக்ஸ், 219 ரன்களில் 135 ரன்கள் என்ற இன்னிங்ஸை முடித்தார். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20, ஒருநாள் போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது இந்த டெஸ்ட் போட்டி. 

டெஸ்ட் போட்டி என்றாலே மந்தமாக இருக்கும் என நினைக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, டெஸ்ட் போட்டி தான் கிரிக்கெட்டின் சிறந்த போட்டிமுறை என்பதை மீண்டும் பறைசாற்றியிருக்கிறது இந்த போட்டி. அதற்கு முக்கியமான காரணம் பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்.

இந்நிலையில், இந்த விறுவிறுப்பான போட்டிக்கு பின்னர் பென் ஸ்டோக்ஸ் செய்துள்ள டுவீட்டில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ள ஸ்டோக்ஸ், ஜாக் லீச்சை லெஜண்ட் என்று புகழ்ந்துள்ளார். 

I fucking(don’t care if I get fined) love Test Match Cricket and I love englandcricket is a legend https://t.co/sJAep39o22

— Ben Stokes (@benstokes38)

ஏனெனில் 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், கடைசி வீரராக களமிறங்கிய லீச், தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்துவிடாமல், ஸ்டோக்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கவனமாக ஆடினார். அவர் கவனமாக ஆடவில்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை. அதனால்தான் அவரை லெஜண்ட் என்று ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.
 

click me!