ஐபிஎல் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. இதுதான் முதன்முறை

By karthikeyan VFirst Published May 6, 2019, 12:03 PM IST
Highlights

சன்ரைசர்ஸ், கேகேஆர், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுமே 12 புள்ளிகளைத்தான் பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் கூட நூழிலையில்தான் பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டன. 
 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் சுற்று முடிந்த நிலையில், தகுதிச்சுற்று நாளை தொடங்குகிறது. 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில், மும்பையை எதிர்கொண்ட கேகேஆர் அணி படுதோல்வி அடைந்ததால், சன்ரைசர்ஸ் அணி நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது. 

சன்ரைசர்ஸ், கேகேஆர், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுமே 12 புள்ளிகளைத்தான் பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் கூட நூழிலையில்தான் பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டன. 

சீசனின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்த கேகேஆர், சன்ரைசர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்தன. ஆனால் ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை பெற்ற ராஜஸ்தானும் ஆர்சிபியும் 11 புள்ளிகளுடன் டீசண்ட்டாக முடித்துள்ளன. எனவே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சன்ரைசர்ஸுக்கும் ஆர்சிபிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒரேயொரு புள்ளி மட்டும்தான் வித்தியாசம். 

சன்ரைசர்ஸ், பஞ்சாப், கேகேஆர் ஆகிய 3 அணிகளுமே 12 புள்ளிகளை மட்டுமே பெற்ற நிலையில், ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. வெறும் 12 புள்ளிகளுடன் ஒரு அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது இதுதான் முதன்முறை. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 12 புள்ளிகளை பெற்ற அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியதே இல்லை. முதல் மூன்று இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளுமே தலா 18 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த அணிகளின் ஆதிக்கம் தான் மற்ற அணிகள் குறைந்த புள்ளிகளை பெற காரணம்.

click me!