ENG vs NZ: 2வது டெஸ்ட் டாஸ் ரிப்போர்ட்..! நியூசிலாந்து அணியில் 3 மாற்றங்கள்

Published : Jun 10, 2022, 03:22 PM IST
ENG vs NZ: 2வது டெஸ்ட் டாஸ் ரிப்போர்ட்..! நியூசிலாந்து அணியில் 3 மாற்றங்கள்

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. லண்டன்ன் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என  முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.

2வது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. கொரோனா காரணமாக இந்த டெஸ்ட்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அதனால் டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணி தான் ஆடும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால், அவருக்கு பதிலாக ஹென்ரி நிகோல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அஜாஸ் படேலுக்கு பதிலாக மாட் ஹென்ரியும், காயமடைந்த காலின் டி கிராண்ட் ஹோமுக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லும் ஆடுகின்றனர்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜாமிசன், டிம் சௌதி, மாட் ஹென்ரி, டிரெண்ட் போல்ட்.
 

PREV
click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி