#INDvsENG கடைசி டெஸ்ட்: இங்கி., முதலில் பேட்டிங்; இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம்! இங்கி., அணியில் 2 மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Mar 4, 2021, 9:27 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி இன்று தொடங்கியது. 3வது டெஸ்ட் நடந்த அதே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தான் இந்த போட்டியும் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியிலிருந்து பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்கு விலகியதால், அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். கட்டாயத்தின் பேரில் இந்த ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதே தவிர, இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் பவுலர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, கூடுதல் ஸ்பின்னராக டோமினிக் பெஸ்ஸும், பேட்டிங் - ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் டேனியல் லாரன்ஸும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி:

டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), டேனியல் லாரன்ஸ், டோமினிக் பெஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!