Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல் பவுலிங்! இங்கிலாந்து அணி 465 ரன்னுக்கு ஆல் அவுட்!

Published : Jun 22, 2025, 09:42 PM IST
Jasprit Bumrah

சுருக்கம்

ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தல் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Jasprit Bumrah 5 Wickets Against England Test: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (147 ரன்) மற்றும் ரிஷப் பண்ட் (134) ஆகிய 3 பேர் சதம் விளாசினார்கள். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டாங்கே விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் அவுட்

பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது ஆலி போப் 100 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், அந்த அணி வீரர் ஆலி போப் 106 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 276/5 என பரிதவித்தது.

ஜேமி ஸ்மித் அதிரடி

பின்பு ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக்கும், ஜேமி ஸ்மித்தும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள். தடாலடியாக‌ மட்டையை சுழற்றிய இவர்கள் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா பந்துகளில் பவுண்டரிகளாக ஓடவிட்டனர். அதிரடியாக விளையாடிய ஜேமி ஸ்மித் 52 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்களில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு பிரசித் கிருஷ்ணா பந்தில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். அப்போது இங்கிலாந்து ஸ்கோர் 349/6 என்ற நிலையில் இருந்தது.

1 ரன்னில் சதத்தை தவற விட்ட ஹாரி ப்ரூக்

மறுபக்கம் சிராஜின் ஓவரில் பவுண்டரிகளாக விளாசிய ஹாரி ப்ரூக் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், 99 ரன்களில் அவுட்டாகி 1 ரன்னில் சதத்தை தவற விட்டார். அதாவது பிரசித் கிருஷ்ணா பந்தில் அவர் சிக்சருக்கு தூக்கி அடித்தபோது அது ஷர்துல் தாக்கூர் கையில் தஞ்சம் அடைந்தது. இதனால் ஹாரி ப்ரூக் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். பின்பு பிரைடன் கார்சும், கிறிஸ் வோக்சும் சேர்ந்து முக்கியமான ரன்களை சேர்த்து 450 ரன்களை கடக்க வைத்தனர்.

இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட்

இதனைத் தொடர்ந்து பிரைடன் கார்ஸ் (22 ரன்) சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். இறுதியில் கிறிஸ் வோக்ஸ் (38 ரன்), ஜோஸ் டாங்கோவை (11 ரன்) பும்ரா காலி செய்தார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவை விட 6 ரன்கள் பின்தங்கியது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 24.4 ஓவர்களில் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 45 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!